search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா வருகை"

    கேரளாவிற்கு இன்று வருகை தரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். #RahulGandhi #Congress
    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக தொடங்கி உள்ளன.

    கேரளாவிலும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் பல்வேறு வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. கேரளாவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட பா.ஜனதா கட்சியும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை கருத்தில் கொண்டு காய்களை நகர்த்தி வருகிறது.



    கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்தில் மட்டும் 2 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். இது அந்த கட்சியின் நிர்வாகிகளை உற்சாகம் அடைய செய்துள்ளது.

    சபரிமலை விவகாரத்தை பாராளுமன்ற தேர்தலில் கையில் எடுத்து ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கேரள அரசியலில் தனது கவனத்தை திருப்பி உள்ளார். இன்று அவர் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பகல் 1.30 மணிக்கு கொச்சிக்கு ராகுல்காந்தி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சமீபத்தில் மரணம் அடைந்த காங்கிரஸ் எம்.பி. ஷாநவாஸ் வீட்டிற்குச் செல்லும் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.

    அதன்பிறகு கொச்சி அரசு விருந்தினர் மாளிகையில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, காங்கிரஸ் மாநில தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கொச்சி மரைன் டிரைவில் காங்கிரஸ் பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துகிறார்.

    மாலை 6 மணிக்கு கொச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். ராகுல்காந்தியின் வருகையால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். #RahulGandhi #Congress

    ×